Home உலகம் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு விடுத்துள்ள அதிரடி உத்தரவு

0

பாகிஸ்தானுக்கு (Pakistan) செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு (Americans) அந்நாட்டு அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மற்றும் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகின்றது.

இதன் காரணமாகவே அமெரிக்கர்களுக்கு இவ் அறிவுறுத்தலை அந்நாட்டு அரசு விடுத்துள்ளது.

வெளியுறவுத்துறை அறிக்கை

இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்கள், இந்தியா (India) – பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version