உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அவரது சொத்து 600 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.
இதன்மூலம், 600 பில்லியன் டொலரை எட்டிய முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
பில்லியன் டொலர்
ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, கடந்த அக்டோபரில் 500 பில்லியன் டொலரை எட்டியது.
இதனிடையே, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 800 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலரை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
