Home அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்பு: ஈரானிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

இஸ்ரேலின் பாதுகாப்பு: ஈரானிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

0

ஈரானிய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் போர் நிறுத்தம்

பதற்றங்களை தணிக்கவும், காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டவும் நடந்து வரும் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , எகிப்தின் ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசி மற்றும் கட்டாரின் அமீர் தமீம் ஆகியோரின் கூட்டு பேச்சுவார்த்தையின் மூலம், இந்த வாரத்தின் பிற்பகுதியில் புதுப்பிக்க, ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

பல உயிர்களை இழக்க இது நேரமில்லை.

அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

ஈரானிய ஆக்கிரமிப்பு

கூடுதலான உதவி விநியோகம் தேவை. அவை தடையற்ற விநியோகமாக அமைய வேண்டும்.

இதன்படி ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் தெரிவித்து வருகிறோம்.

மேலும், இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version