Home உலகம் சவுதி மீதான முக்கிய தடையை நீக்கும் பைடன் நிர்வாகம்

சவுதி மீதான முக்கிய தடையை நீக்கும் பைடன் நிர்வாகம்

0

அமெரிக்கா(US) மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியா(Saudi Arabia) மீது விதிக்கப்பட்டிருந்த முக்கிய தடையொன்றை நீக்கியுள்ளது.

அதாவது, சவுதி அரேபியாவிற்கு அமெரிக்க தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்க பைடன்(Joe Biden) நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2021-ஆம் ஆண்டில், யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதியின் போரில் சாதாரண பொதுமக்கள் இறந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்கா சவுதி

இதை எதிர்த்து அமெரிக்கா சவுதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தடை விதித்தது.

இதற்குப் பிறகு, 2022 இல் ஐ.நா.வின் மத்தியஸ்தத்துடன், யேமன் மற்றும் சவுதியில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இதையடுத்து அங்கு வான்வழித் தாக்குதலை சவுதி நிறுத்தியது.

அமெரிக்க சட்டத்தின்படி, எந்தவொரு நாடும் பாரிய ஆயுதங்களை வழங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

தடை முடிவு

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் இருவரும் யேமனில் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளனர், மேலும் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து பல முறை கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸில் போர் தொடங்கியதிலிருந்து இந்த எதிர்ப்பு குறைந்துவிட்டது.

இதன்மூலம், மூன்று ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்க வெளியுறவு துறை, சவுதி அரேபியாவுக்கு காற்று முதல் தரை வரை எனப்படும் (Air-to-Ground) ஆயுதங்களை மாற்றுவதற்கான தடை சிலவற்றை நீக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version