Home இலங்கை சட்டவிரோதமாக மியன்மாருக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்கள் : அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோதமாக மியன்மாருக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்கள் : அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

0

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியான்மாரில் வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

மியன்மாரில் சட்டவிரோதமாக வேலைக்காகச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று மியான்மரில் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாமில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, அரசாங்கம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், 89 இலங்கையர்கள் சட்டவிரோதமாக மியான்மருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அர்ப்பணிப்பு

இந்தநிலையில், மியன்மார் அரசாங்கத்தின் உதவியுடன் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு முயற்சியின் மூலம் 40 இலங்கையர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பினும் சைபர் கிரைம் பகுதியில் 54 இலங்கையர்கள் இன்னும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இன்னும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறாயினும் முன்னெச்சரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் இருந்த போதிலும் சில நபர்கள் சட்டவிரோதமான வழிகளில் வேலைவாய்ப்பிற்காக மியன்மாருக்கு தொடர்ந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சு

இதனடிப்படையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மியான்மருக்கு வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அனைத்து இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version