அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அதனது முதன்மை இலக்கு பொருளாதாரமாக இருந்தாலும், அந்தப் பொருளாதார இலக்கை அடைவதற்கு அமெரிக்கா உபயோகப்படுத்துவது அதனது புஜபலத்தைத்தான்.
தனது இராணுவ வலிமையை எங்காவது ஒரு இடத்தில் வெளிப்படுத்தி, உலக நாடுகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி, அந்த அச்சத்தின் பின்னணியில்தான் தனது பொருளாதார இலக்குகளை இலகுவாக அடைந்து வருகின்றது அமெரிக்கா.
அதாவது, அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது அதனது இராணுவச் சாதனைகளில் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
டொனல்ட் ட்ரம்ப் ஆட்சிக்கட்டில் ஏறி, அவர் திட்டமிட்டு வைத்திருக்கின்ற பொருளாதார இலக்குகளை நோக்கி அமெரிக்காவைக் கொண்டு செல்வதற்கு அவருக்கு ஒரு இராணுவ வெற்றிச் செய்தி நிச்சயம் தேவை.
அந்த இராணுவ வெற்றிக்கான அஸ்திவாரத்தை அவர் எங்கே போடுவார் என்பதுதான் இன்று பலருக்கும் இருக்கின்ற பிரதான கேள்வி.
டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும் அமெரிக்கா உடனடியாக படை நவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நாடு பனாமா இந்த விடயம் பற்றிய ஆழமான பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: