Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

0

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமெரிக்கா மீண்டும் உறுதியளித்துள்ளது.

அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ராபர்ட் கப்ரோத் (Robert Kaproth) இந்த உறுதியை வழங்கியதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜோர்ஜியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

கடன் மறுசீரமைப்பு

இந்த கூட்டத்தின் பக்க சந்திப்பாக அவர் பல நாடுகளின் முக்கிய தரப்பினரை சந்தித்து வருகிறார்.

இதற்கமைய, அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ராபர்ட் கப்ரோத்தை ஷெஹான் சேமசிங்க சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறையை சரிவர கொண்டு செல்வது நிலையான பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும் எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை தவிர்கக உதவுமெனவும் ராபர்ட் கப்ரோத் கூறியுள்ளார்.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version