Home உலகம் அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம் : பயணித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம் : பயணித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

0

 அமெரிக்காவில்(us) பறப்பை மேற்கொண்டிருந்த சிறிய ரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று(19) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பெண்கள் உட்பட நால்வர் பலி

இந்த விபத்தினால், விமானத்தில் பயணித்த இரு பெண்களும், இரு ஆண்களும் என நால்வரும் உயிரிழந்தனர். 

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்களம்(NTSB) விசாரணையைத் தொடங்கியுள்ளன.

NO COMMENTS

Exit mobile version