Home இலங்கை அரசியல் ஆறே மாதங்களில் அளப்பரிய சாதனைகளை செய்துள்ளோம்! பிரதியமைச்சர் சுனில் வடகல

ஆறே மாதங்களில் அளப்பரிய சாதனைகளை செய்துள்ளோம்! பிரதியமைச்சர் சுனில் வடகல

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த ஆறே மாதங்களில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அளப்பரிய சாதனை

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த 76 வருடங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்தவற்றை விட அளப்பரிய சேவைகளை, சாதனைகளை நாங்கள் புரிந்துள்ளோம்.

அவற்றைப் பட்டியலிடத் தொடங்கினால் சிரமமான விடயமாக இருக்கும்.

ஆனால் சுருக்கமாக சொல்வதாக இருந்தால், கடந்த காலங்களில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றது.

இப்போது ஆறுமாதங்களாக மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் சுனில் வட்டகல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version