இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச்சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இன்று(13.06.2025) அதிகாலை இஸ்ரேல் திடீர் தாக்குதலொன்றை நடத்தியிருந்தது.
மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றம் மோசமடைந்ததால் இன்று பிற்பகல் அமெரிக்க பங்குச்சந்தை 1.2 சதவீதத்தால் சரிந்தது.
2 சதவீத சரிவு
இதனையடுத்து, இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தையில் 2 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
