Home இலங்கை பொருளாதாரம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் இலங்கை மீதான அமெரிக்காவின் வரி

இன்று முதல் நடைமுறைக்கு வரும் இலங்கை மீதான அமெரிக்காவின் வரி

0

இலங்கை மீது அமெரிக்கா விதித்த 20 சதவித வரி இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி, இலங்கை மீது அமெரிக்கா 44 சதவீத வரியை அறிவித்தது. அதனையடுத்து வரிகளை குறைக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதற்கமைய வரி விகித 30 சதவீதமாக குறைக்க முடிந்தது. மீண்டும் வரி விகிதத்தை குறைக்க அரசாங்கம் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி

இதன் காரணமாக இலங்கை மீது விதித்த வரி விகிதம் 20 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதியால் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளும் வகையில் ஐரோப்பா, ஆசியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் ஏற்றுமதி சந்தையை பன்முகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரிகளின் தாக்கத்தை சமாளிக்க ஏற்றுமதித் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக ஏற்றுமதி அதிகார சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version