Home அமெரிக்கா காசாவில் போரை நிறுத்தக்கோரி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்து

காசாவில் போரை நிறுத்தக்கோரி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்து

0

Courtesy: Sivaa Mayuri

ஹமாஸ் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 2024 அக்டோபர் 7 முதல் காசாவில் (Gaza) தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் நாடு திரும்ப முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம், நெதன்யாகுவுடன் ஒரு “வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான” உரையாடலைக் மேற்கொண்டதாக ஹாரிஸ் கூறியுள்ளார்.

மனிதாபிமான நிலைமை

இதன்போது, இஸ்ரேலின் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஹாரிஸ் உறுதிப்படுத்தினார்.

அத்துடன் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை அமெரிக்க துணை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

39,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மரணித்துள்ள காசாவின் கொடூரமான போருக்கு இறுதி முடிவை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது என்ற ஜனாதிபதி ஜோ பைனின் நீண்டகால செய்தியை ஹாரிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

இதேவேளை ஹாரிஸ், ஹமாஸின் செயற்பாடுகளையும் கண்டித்துள்ளார்.

2024 ஒக்;டோபர் 7 அன்று சுமார் 1,200 பேரைக் கொன்று இஸ்ரேலில் இருந்து 250 பேரைக் கடத்திச் சென்ற ஹமாஸ் அமைப்பு, இறுதியில் காசாவில் ஏற்பட்ட துன்பங்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version