Home இலங்கை அமெரிக்கப் போர் விமானங்களிற்கு இலங்கைக்குள் ஏற்பட்ட நெருக்கடி

அமெரிக்கப் போர் விமானங்களிற்கு இலங்கைக்குள் ஏற்பட்ட நெருக்கடி

0

இலங்கைக்குள் பாதுகாப்பு தஞ்சம் கேட்டு வந்த ஈரானின் போர்க் கப்பலில் இருந்த 80 கடற்படையினர் அமெரிக்காவினுடைய நீர்ழூழ்கிக் கப்பலினுடைய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களை இலங்கை அரசாங்கம் ஈரானிடம் கையளித்து இருந்தது.

இதனையடுத்து 80 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கின்ற வகையில் ஈரானும் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றது.

மேற்கு ஜெருசலேத்தில் அமைந்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் மீது ஈரான் தாக்குதலை நடாத்தி இருக்கின்றது.

இஸ்ரேலில் இருக்கக்கூடிய வான்படைத் தளம் முழுமையாக சேதமாக்கபட்டுள்ளதுடன் உளவுத்துறை தலைமையகங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

அந்தத் தாக்குதல் என்பது இஸ்ரேல், அமெரிக்கா வரலாற்றில் எதிர்பார்த்திராத ஒரு தாக்குதலாக அமைந்திருக்கும் என போரியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்கள் தரையிறங்குவதற்கு அமெரிக்காவும், நல்லெண்ண வருகைக்காக இலங்கைக்கு வர ஈரான் கப்பல் ஒன்றும் அனுமதி கோரியிருந்ததாகவும் அரசாங்கம் இரண்டிற்கும் அனுமதி வழங்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

Source: https://tamilwin.com/article/us-warplanes-enter-sri-lanka-iran-trump-anura-1774026587

NO COMMENTS

Exit mobile version