Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா

இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்படிக்கை செய்தியை அமெரிக்கா வரவேற்றுள்ளது

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் ஒரு சாதகமான படியாகும்.

நிலையான மாற்றங்கள்

இது இலங்கையின் நிதி சூழலில் அதிக நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது என்றும் அமெரிக்க தூதுவர் தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நீண்டகால செழிப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வெளிப்படையான மற்றும் நிலையான மாற்றங்களை ஏற்று, சீர்திருத்த செயல்முறையை தொடர அமெரிக்கா, இலங்கையை ஊக்குவிக்கிறது என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். 

 

NO COMMENTS

Exit mobile version