Home அமெரிக்கா Chat GPTயால் கிடைத்த அதிஸ்டம்.. மில்லியன்களை அள்ளிச் சென்ற பெண்

Chat GPTயால் கிடைத்த அதிஸ்டம்.. மில்லியன்களை அள்ளிச் சென்ற பெண்

0

அமெரிக்காவின் சேர்ந்த பெண்ணொருவருக்கு Chat gpt வழங்கிய எண் கொண்ட லொட்டரி டிக்கெட் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. 

அமெரிக்கா – வர்ஜீனியாவை சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்ணுக்கே இந்த அதிஸ்டம் அடித்துள்ளது.

குறித்த பணத்தொகை, இலங்கை ரூபாவின் படி, கிட்டத்தட்ட 45 மில்லியன்கள் ஆகும். 

லொட்டரி பரிசு  

கேரி எட்வர்ட்ஸ், லொட்டரி வெல்ல முடிவு செய்து Chat GPTயிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லொட்டரி சீட்டை வாங்கலாம் என பரிந்துரைக்க கேட்டுள்ளார்.

அதற்கமைய, செயற்கை நுண்ணறிவு செயலியான Chat GPT தகவல்களை வழங்கியுள்ளது. 

தொடர்ந்து, Chat GPT  கொடுத்த தகவலின்படி வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

அதேவேளை, வென்ற பணம் அனைத்தையும் தனது இறந்த கணவரின் பெயரில் நன்கொடையாக வழங்க உள்ளதாக குறித்த பெண் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version