Home உலகம் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம்: திட்டத்தை முறியடித்த அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம்: திட்டத்தை முறியடித்த அமெரிக்கா

0

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானத்தை அமெரிக்கா தடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது.

இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன் இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

தடம் மாறும் இஸ்ரேல் – ஈரான் போர்.. ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

பாதுகாப்பு கவுன்சில்

இந்நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டுமென்ற முயற்சியை பலஸ்தீனம் மேற்கொண்டது.

இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவான நிலையில் சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் : உச்சத்தை தொட்ட எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள்

ஐக்கிய நாடு

இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளில் பலஸ்தீனம் பங்கேற்க முடியும் ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை: பதுங்கித் தாக்கும் உத்தியைக் கையாள்கிறதா ஈரான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version