Home அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்கள் ரத்து

உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்கள் ரத்து

0

அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான யுஎஸ்எய்ட்’டின், வெளிநாட்டு உதவி
ஒப்பந்தங்களில் 90% ற்கும் அதிகமானவற்றையும், உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த
அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்களையும் நீக்குவதாக,
ட்ரம்ப்(Donald Trump) நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று(26) வெளியிடப்பட்டுள்ளது.

USAID நிறுவனத் திட்டங்கள் 

USAID நிறுவனத் திட்டங்கள் ஒரு தாராளவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும்,
பணத்தை வீணடிப்பதாகவும், ட்ரம்ப் மற்றும் அவரின் நண்பர் மஸ்க் ஆகியோர் கூறி
வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2025, ஜனவரி 20 அன்று ட்ரம்ப், எந்தெந்த வெளிநாட்டு உதவித்
திட்டங்கள் தொடரத் தகுதியானவை என்பதை 90 நாள் திட்ட அடிப்படையில் மதிப்பாய்வு
செய்ய உத்தரவிட்டார்,

மேலும் அனைத்து வெளிநாட்டு உதவி நிதிகளையும் கிட்டத்தட்ட ஒரே இரவில்
துண்டித்தார்.

இந்த நிதி முடக்கம் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க நிதியுதவி
திட்டங்களை நிறுத்தியுள்ளது,

இதனடிப்படையில், ட்ரம்ப் நிர்வாகம், பெரும்பாலான USAID ஊழியர்களை கட்டாய
விடுப்பு மற்றும் பணிநீக்கம் மூலம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

 54 பில்லியன் டொலர்கள்

வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பணிநீக்கங்களை மதிப்பாய்வு செய்ததாக
வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், ட்ரம்ப் நிர்வாகம் 6,200 USAID ஒப்பந்தங்களில் 5,800 ஐ, அதாவது
54 பில்லியன் டொலர்களை நீக்குவதாகக் கூறியுள்ளது.

9,100 வெளியுறவுத் துறை மானியங்களில் 4,100 அதாவது 4.4 பில்லியன் டொலர்கள்
குறைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version