Home விளையாட்டு உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!

உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!

0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் (Usain Bolt) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) மற்றும் அமெரிக்கா (America) ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

ஜமைக்காவின் கரீபியன் தீவில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்த உசைன் போல்ட் உயர்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டிகளை பயின்று வேகமாக ஓடக்கூடிய நபராக மாறினார். 

உலகக் கோப்பை தொடர்

உலகளாவிய ரீதியில், மிகவும் வேகமாக ஓடக்கூடிய நபராக சாதனை படைத்த உசைன் போல்ட், தற்போது ஐசிசி 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் ஆர்ஜென்டினா கோரிக்கை!

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கிரிக்கெட் எனது வாழ்வின் ஒரு அங்கமாகும். விளையாட்டு போட்டிகள் எப்போதும் எனது மனதில் சிறப்பு இடத்தை கொண்டுள்ளன. 

தற்போது எனக்கு ஒரு சிறந்த பதவி கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமை கொள்கிறேன். 

இந்த T20  உலக கோப்பை போட்டிகளை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைய செய்ய என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்” என தெரிவித்துள்ளார். 

16 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வந்த ஈரான் அதிபர்! ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version