Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயருமென கணிப்பு: இன்று பதிவாகியுள்ள நிலவரம்

அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயருமென கணிப்பு: இன்று பதிவாகியுள்ள நிலவரம்

0

2022ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 360 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், அது 450 – 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரூபாவின் பெறுமதியின் பலன் படிப்படியாக மக்களுக்கு கிடைக்கும். ரூபா பெறுமதி வலுவடைந்தமையினால், கடனை திருப்பிச் செலுத்தும் சுமை குறைவடைந்தமையும் இங்கு முக்கியமானது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

சந்தை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அமெரிக்க டொலரின் பெறுமதி

2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உத்தியோகபூர்வமாக 360 ரூபாவாக அதிகரித்துள்ளது. அது 450 – 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்த விகிதம் 300 என்ற அளவில் பேணப்பட்டு வருகிறது.

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேக்ரோ பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை உணர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இதுவரை வெற்றியடைந்துள்ளது.

அதன் விளைவாக நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். 

எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version