Home அமெரிக்கா கமலா ஹாரிஸை தொடர்ந்து அமெரிக்காவில் கவனம் பெற்ற மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

கமலா ஹாரிஸை தொடர்ந்து அமெரிக்காவில் கவனம் பெற்ற மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண்

0

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் போட்டியிட்ட போது, அவரது துணை ஜனாதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸூக்கு கிடைத்த அதே ஊடக வெளிச்சம் தற்போது மற்றுமொறு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ஜனாதிபதியாக தெரிவானால் துணை ஜனாதிபதியாக செனட்டர் ஜே.டி.வொன்ஸ் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஜே.டி.வொன்ஸை விட அவருடைய இந்திய வம்சாவளி மனைவியான உஷா சிலுக்குரி தரப்பில் அமெரிக்க ஊடகங்கள் அதிக கவனம் வெலுத்தி வருகின்றன.

சட்டத்தரணியாக பணியாற்றும் உரிமம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி சட்டக் கல்லூரியில் வைத்தே 2013ல் ஜே.டி.வான்ஸை சந்தித்துள்ளார்.

குழு விவாதம் ஒன்றில் இருவரும் ஒரே அணியில் கலந்து கொண்டுள்ள அதன் பின்னர் இருவரும் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்துள்ளனர்.

யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளதோடு, Munger, Tolles, மற்றும் Olson ஆகிய நிறுவனங்களுக்கான சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கலிபோர்னியா, ஓஹியோ மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகிய நீதிமன்றங்களில் சட்டத்தரணியாக பணியாற்றும் உரிமம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

2014இல் ஜே.டி.வான்ஸ் – உஷா தம்பதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகளாக பிறந்த உஷா, இந்து முறைப்படியே தமது வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version