Home இலங்கை அரசியல் மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு

மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு

0

தமிழ் அரசியல்வாதிகள் மதுபானசாலை அனுமதி விடயத்திலே அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது நிச்சயமாக தமிழ் மக்களைப் பாதிக்கின்ற விடயம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு (UTF) தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடக்கின்ற எல்லா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தமிழ் அரசியல்வாதிகளைக் காண முடியும். ஆனால் அவர்கள் தான் இதற்குரிய காரணமென்பது மிகவும் வேடிக்கையானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று (15) யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,  

“இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வைக் காணக்
கூடியதாக உள்ளது. அதாவது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கைக்குரிய தேடலாக இந்த தேர்தல் களத்தை பார்க்கின்றார்கள்.

2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வை நோக்கிய நகர்விற்காக மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். அந்த ஆணை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு மக்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை.

நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த நிலையிலிருந்து மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கின்றோம்.

50 வீதமான பெண்கள் எங்களுடைய வேட்பாளர்களாக நிற்கின்றனர். 

மதுபான பாவனையில் முதலிடத்தில் நுவரெலியாவும் இரண்டாம் இடத்தில் யாழ்ப்பாணமும் என்றவாறு தமிழ் பகுதிகள் முதல் இடங்களில் இருப்பது திட்டமிட்ட செயற்பாடு.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடநெருக்கடி காரணமாக மக்கள் விடுதிகளுக்கு வெளியில் மக்கள் படுத்துறங்குகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டவில்லை.“ என தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/r_YxU8nWRmk

NO COMMENTS

Exit mobile version