Home இலங்கை அரசியல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நகர்வு! குற்றம் சுமத்தும் ரோஹண விஜேவீரவின் மகன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நகர்வு! குற்றம் சுமத்தும் ரோஹண விஜேவீரவின் மகன்

0

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சர்வதேச சமூக உறுப்பினர்கள் விரோதமான நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றியுள்ளனர் என உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தலைமுறை, அமைப்பின் உருப்பினரும், ரோஹண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர இதனை கூறியுள்ளார்.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்த NPP அரசாங்கத்தை, அதன் தவறை சரிசெய்ய அழுத்தம் கொடுப்பதற்காக, கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கையெழுத்து பிரசாரம்

மேலும், உவிந்து விஜேவீர தலைமையிலான இரண்டாம் தலைமுறை, இன்று (28) காலை 10 மணிக்கு NM பெரேரா மையத்தில் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட ஜேவிபி கட்சியின் நிறுவனர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து, ஜெனீவா அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த உத்தி இல்லாத நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சர்வதேச சமூக உறுப்பினர்கள் விரோதமான நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றினர் என்றும் கூறியுள்ளார்.

ஜெனீவா செயல்முறை அதன் ஒரு பகுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version