Home சினிமா உச்சநீதிமன்றம் வரை சென்ற ஞானவேல்ராஜா.. வா வாத்தியார் பற்றி வந்த அதிரடி தீர்ப்பு

உச்சநீதிமன்றம் வரை சென்ற ஞானவேல்ராஜா.. வா வாத்தியார் பற்றி வந்த அதிரடி தீர்ப்பு

0

 நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து இருக்கும் வா வாத்தியார் படம் கடந்த டிசம்பர் 12ம் தேதியே ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் நீதிமன்ற தடையால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து வாங்கிய கடனை வட்டி உடன் திருப்பி செலுத்தினால் தான் படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.

அதை ஏற்று நீதிமன்றம் வா வாத்தியார் பட ரிலீசுக்கு தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இதை தொடர்ந்து தடையை நீக்க கோரி ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தான் தலையிட விரும்பவில்லை என சொல்லி நீதிபதி சஞ்சய் குமார் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனால் வா வாத்தியார் பட ரிலீஸுக்கு மேலும் சிக்கல் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version