Home இலங்கை கல்வி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை! பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை! பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறை

இதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது 42,000 இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கூறியுள்ளார். 

மேலும், வடக்கு மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரபட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version