Home சினிமா 5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு.. ஆனால் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான்

5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு.. ஆனால் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான்

0

நடிகர் வடிவேலு உடன் பல படங்களில் காமெடியனாக நடித்து இருப்பவர் சிங்கமுத்து. ஜூஸ் காமெடி, என்ன வேணும் காமெடி, லெக் பீஸ் காமெடி என அவர்கள் நடித்து ஹிட் ஆன காமெடி காட்சிகள் லிஸ்ட் இன்னும் மிக நீளமானது.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த பல வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. சிங்கமுத்து பல மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் வடிவேலுவை பற்றி பல தகவல்களை வெளியிட்டு பேட்டிகள் கொடுத்து வந்தார்.

ஒரு நடிகரை ஆள் வைத்து அடித்தது உட்பட பல விஷயங்களை சிங்கமுத்து பேட்டிகளில் கூறி வந்தார். அதனால் தன்னை பற்றி அவதூறாக பேசும் சிங்கமுத்துவிடம் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.

அபராதம்

கடந்த பல மாதங்களாக அந்த வழக்கு நடந்து வந்த நிலையில் சிங்கமுத்து மேற்கொண்டு பேச இடைக்கால தடை இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் வடிவேலு பற்றி அவதூறாக பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version