Home உலகம் பதிலடிக்கு தயாராகும் ஈரான் : கேள்விக்குறியாகும் அடுத்த நிமிடங்கள் – பதற்றத்தில் சர்வதேசம்

பதிலடிக்கு தயாராகும் ஈரான் : கேள்விக்குறியாகும் அடுத்த நிமிடங்கள் – பதற்றத்தில் சர்வதேசம்

0

ஈரான் மீது நேற்றைய தினம் (22.06.2025) அமெரிக்காவின் தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களிலேயே, பதில் தாக்குதல் நடைபெற்றே தீரும் என்கின்ற விடயத்தை உறுதியாகத் தெரிவித்தது ஈரான்.

எங்கள் பதிலடியை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று ஈரானின் Islamic Revolutionary Guard Corps தெரிவித்திருந்தது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவுக்கும், யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கும் தமது பதிலடி இருக்கும் என்றும் ஐ.ஆர்.ஜி.சி. அறை கூவல் விடுத்திருந்தது.

மேலும், ஈரான் இராணுவத்தின் Khatam al-Anbiya unit என்ற சிறப்புப் படைப்பிரிவின் ஒரு அதிகாரி கூறுகின்றபோது, செத்துக்கொண்டிருக்கின்ற சீயோனிச தேசத்தைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மேறகொண்ட இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக தமது படையணி கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டேயாகும் என்று எச்சரித்திருந்தார்.

இதேபோன்று, பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron உடன் தொலைபேசியில் உடையாடிய ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian ,
அமெர்க்காவின் அந்த நடவடிக்கைக்கு நிச்சயமாக ஈரானின் பதிலடி இருந்தேயாகும் என்று தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவுக்கான ஈரானின் பதிலடி அதனது துணை இராணுவக் குழுக்களின் மூலம் மேற்கொள்ளப்படலாம் என்றும் பரவலாகக் கூறப்பட்டுவருகின்ற நிலையில், சாத்தியமான ஈரானின் பதிலடி பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

 

https://www.youtube.com/embed/-GPJvXIj2qA

NO COMMENTS

Exit mobile version