இலங்கையில் (Sri Lanka) பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம் 694.5 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பில்லியன் கணக்கில் வருமானம்
கடந்த 2022 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி 463.1 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் பெறுமதி சேர் வரியை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.