அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் (09.7.2026) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (09) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.86 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன் கொள்வனவு விலை 331.34 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (08) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.73 ரூபாயாகவும், கொள்வனவு விலை 330.28 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.
வீழ்ச்சி
இதேவேளை,ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442.55 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.75 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.26ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.79 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.70 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227.21ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.64 ஆகவும் பதிவாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening
Source: https://tamilwin.com/article/value-of-the-sri-lankan-rupee-falls-usd-dollars-1783581704
