Home இலங்கை அரசியல் வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

0

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.

உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படும்.

அந்தவகையில், முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிரமதான பணி

இந்த சிரமதான பணி வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் 2024.11.27 மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கும் முகமாக பணிக்குழுவினால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதன் ஆரம்ப கட்டமாக சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/vannivilankulam-maaveerar-naal-2024-1729584040

NO COMMENTS

Exit mobile version