Home இலங்கை அரசியல் தேர்தல் நாளில் பல்வேறு சட்டமீறல் சம்பவங்கள் – கண்காணிப்பாளர்களின் அறிக்கை

தேர்தல் நாளில் பல்வேறு சட்டமீறல் சம்பவங்கள் – கண்காணிப்பாளர்களின் அறிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் சில பகுதிகளில் இருந்து தேர்தல் சட்டங்களை மீறும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேகாலை, தெவிநுவர, காலியின் அதுலுகொட, கம்பஹா, நாத்தாண்டிய, குளியாப்பிட்டிய, மாத்தறை, வெலிகம, பெந்தர – எல்பிட்டிய, பலாங்கொடை, கொலன்னாவ, ரத்கம,கிரிபத்கொட, கேகாலை, யட்டியந்தோட்டை போன்ற இடங்களில் பல தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெஃப்ரல் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத தேர்தல் பிரசாரம் முதல் வாக்காளர்களை அழைத்துச் செல்வது போன்ற சம்பவங்கள் இதில் அடங்குகின்றன.
மாத்தளை நாவுல, மெத்தேகந்த, பண்டாரவளை, மாத்தறை பெரகம, பத்த ஹெவாஹட்ட மவுசாவ ஆகிய இடங்களில் ஐந்து வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடுமையான சம்பவங்கள் பதிவாகவில்லை

இருந்தபோதிலும், வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் அல்லது சூழ்நிலைகள் தேர்தல் நாளில் ஏற்படவில்லை. 

வாக்குச் சாவடிகளுக்கு அருகில் சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள், பொதுக் கூட்டங்கள், மிரட்டல் மற்றும் வாக்காளர்களை செல்வாக்கு செலுத்துதல் மற்றும் கொண்டு செல்வது குறித்து கடுமையான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version