Home முக்கியச் செய்திகள் அனைத்து போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

அனைத்து போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

0

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் (Varun Aaron) அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றையதினம் (10.01.2025) வெளியிட்ட பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

35 வயதான வருண் ஆரோன் 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார்.  

இந்திய அணி

இவர் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளிலும் விளையாடியுள்ளதுடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது முழுமையாக அனைத்துவிதமான போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதை அறிவித்துள்ளார்.

இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளும், 11 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

மேலும், முதல்தரப் போட்டிகளில் 66 போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://instagram.com/p/DEoy6i8ooFh/embed/

NO COMMENTS

Exit mobile version