Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அநுர அரசின் புதிய முடிவு

வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அநுர அரசின் புதிய முடிவு

0

2028ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வரி வருமானம் இருக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை ஆகும்.

இதனால் தான் அரசாங்கத்தால் பல புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதற்கமைய, அண்மையில் நிதி அமைச்சு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின் பிரகாரம், டிஜிட்டல் மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் 18 சதவீத வரி அறவிடப்பட உள்ளது.

அத்துடன், குறித்த டிஜிட்டல் மூலம் சேவை வழங்கும் நிறுவனத்தின் ஒரு செயலகமும் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு ஒரு செயலகம் அமைக்கப்படாவிட்டால் இந்த நாட்டில் சேவையை தொடர குறித்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்.

எவ்வாறாயினும், தற்போது இந்த தீர்மானம் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version