Home இலங்கை சமூகம் மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

0

2024ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல்
போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை
படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (17.07.2024) மாகாண
ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா
பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் மூவர் தங்கப்பதக்கத்தையும், ஒரு
வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

தொடர் சாதனை

அதில் 17 வயது பிரிவில் 59kg எடை பிரிவில் 70kg எடையை தூக்கி சூ.அனுஷா முதலாம்
இடத்தையும், 64 kg எடை பிரிவில் 75kg எடையை தூக்கி க.வன்சிகா முதலாம்
இடத்தையும், 81kg எடை பிரிவில் 84kg எடையை தூக்கி க.அபிசாளினி இரண்டாம்
இடத்தையும், 20வயது பிரிவில் 49kg எடை பிரிவில் 80kg எடையை தூக்கி பி.மேரி
அசெம்ரா முதலாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் , மாவட்டத்திற்கு பெருமை
சேர்த்துள்ளனர்.

பளுதூக்கல் போட்டிக்கான மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவன் ஆசிரியர்,
நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர் செ. அம்பிகா, மற்றும் மாணவர்களுக்கு
பொறுப்பாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ந. ரூபராஜா ஆகியோரின் தியாகமும்
உழைப்பும் இன்றியமையாததாகும்.

இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு
தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version