Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage), தம்மை கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த தனது மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டார்.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயானா கமகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டனர்.
குடியுரிமை தொடர்பான பிரச்சினை
எனவே அதனை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மனுவை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக, குடியுரிமை தொடர்பான பிரச்சினையில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட நிலையில்,டயானா கமமே, நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டார்.