Home இலங்கை சமூகம் வவுனியா – யாழ்ப்பாணம் தொடருந்து பாதை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

வவுனியா – யாழ்ப்பாணம் தொடருந்து பாதை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

0

புயல் மற்றும் மழையின் காரணமாக பாதிப்படைந்த தொடருந்து பாதைகளை சீரமைக்கும்
நடவடிக்கைகளை வவுனியா தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்களும், இராணுவத்தினரும்
இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடருந்து பாதைகள் பல இடங்களில்
வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்திருந்தது.

சீரமைப்பு நடவடிக்கை

இந்த பாதிப்படைந்த தொடருந்து பாதைகளை சீரமைத்து தொடருந்து சேவையை வழமைக்கு
கொண்டு வரும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக தொடருந்து தண்டவாளங்களை பழுது பார்த்தல் மற்றும் தண்டவாளங்களில் நீர்
பாய்ந்த அரிக்கப்பட்ட இடங்களை சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இராணுவத்தினரும்
வவுனியா தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version