Home இலங்கை சமூகம் மழைக்கு மத்தியில் ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

மழைக்கு மத்தியில் ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

0

புதிய இணைப்பு

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று (27) இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதானஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியதால்
ஏற்றி வைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.

ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில்
வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின
நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது
உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

முதலாம் இணைப்பு

வவுனியா  (Vavuniya) மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (27) வவுனியா
நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

நினைவேந்தல் நிகழ்வுகள்

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

வவுனியா மட்டுமின்றி தமிழர் தாயகப்பகுதிகளில் இன்றையதினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/vavuniya-maaveer-day-1732713293

NO COMMENTS

Exit mobile version