Home முக்கியச் செய்திகள் திகிலூட்டும் தலைதுண்டிப்பும் : செம்மணி குரூரங்களும் : தமிழரசு எதிர்பாராத உலுக்கம்

திகிலூட்டும் தலைதுண்டிப்பும் : செம்மணி குரூரங்களும் : தமிழரசு எதிர்பாராத உலுக்கம்

0

தமிழ் மக்கள் மீது கடந்த காலத்தில் நடந்த கொடூரங்களின் சாட்சியங்களாக கருதப்படும் சில எலும்புக்கூடுகள் செம்மணி மயானத்தில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பழைய ஆதாரத்திற்குரிய புதிய செய்தியாகும்.

இதேவேளை வவுனியாவில் ஆசிரியராக பணிபுரியும் மனைவியின் கழுத்தை வெட்டி அந்த தலையுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த கணவன் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.

இவ்வாறான சம்பவம் தமிழர் தாயகத்தின் சமூக நிலை பகீரிடும் வகையில் மாறியுள்ளது. இவை புதிய குரூரங்களின் சாட்சிகள்.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தலைமையாக கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில் யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது தமிரசு கட்சியை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.

இவ்வாறு பல்வேறு விடயங்களை தாங்கி வந்துள்ளது இன்றைய ஐபிசி தமிழ் செய்தி வீச்சு. இதில் உள்ள மேலும் பல விடயங்கள் விரிவாக காணொளியில்…

https://www.youtube.com/embed/HQ2pZhXMD3I

NO COMMENTS

Exit mobile version