வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம் இன்று(27.01.2025) பிரதி அமைச்சர்
உபாலி சமரசிங்க திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் வீதியில் வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள
கட்டிடத்திலேயே குறித்த ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நாட்கள் தவிர்ந்த தினங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளை
நிறைவேற்றும் வகையில் இந்த அலுவலகத்தில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
