Home இலங்கை அரசியல் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்

0

என்.ஜி. வீரசேன கமகே (N.G.Weerasena Gamage) சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் வீரசேன சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காசாவில் நூற்றுக்கணக்கான உடல்களைக் கொண்ட புதைகுழிகள்: அச்சத்தில் ஐ.நா

உயிரிழந்த எச். நந்தசேன 

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி, அநுராதபுரம் மாவட்டத்தில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த தேர்தலில் 53,618 விருப்பு வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்த எச். நந்தசேன (K. H. Nandasena) அண்மையில் திடீரென்று உயிரிழந்திருந்தார்.

கடந்த 2020 தேர்தலில் 38,242 விருப்பு வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன கட்சியின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்த வீரசேன கமகே, புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னக்கோனைச் சந்தித்ததற்காக விமர்சனத்திற்குள்ளான கனேடிய பீல் பிராந்திய காவல்துறை மா அதிபர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version