Home இலங்கை சமூகம் புது வருடத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

புது வருடத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

0

புதுவருடத்தில் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக
அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முருங்கைக்காய் ஒரு கிலோகிராம் 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 450
ரூபாவிற்கும், தக்காளிப்பழம் ஒரு கிலோகிராம் 600 ரூபாவிற்கும், பீற்றூட் ஒரு கிலோகிராம் 300
ரூபாவிற்கும் நேற்று (13) வடமராட்சி சந்தைகளில் விற்பனையாகியுள்ளன.

பொருட்களின் விலை அதிகரிப்பு

இந்நிலையில்,  நேற்றைய தினம் (13) புத்தாண்டு சந்தை
பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை நகர்ப் பகுதியில் கடந்த வருடங்கள் போல்
அல்லாது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.

இதற்கு பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாமென
நம்பப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version