Home இலங்கை அரசியல் ஹிஸ்புல்லாவின் வாகனம் மட்டக்களப்பு கச்சேரிக்குள் சென்றதால் ஏற்பட்ட சர்ச்சை

ஹிஸ்புல்லாவின் வாகனம் மட்டக்களப்பு கச்சேரிக்குள் சென்றதால் ஏற்பட்ட சர்ச்சை

0

மட்டக்களப்பு கச்சேரிக்குள் வாகனங்கள் உட்செல்ல பொலிஸார் தடைவிதித்திருந்த நிலையில் முன்னாள்
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் வாகனத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கியதால் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த 11ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்ற வேட்பாளர்கள் உட்பட அனைவரது வாகனங்களுக்கும் கச்சேரிக்குள் உட்செல்ல தடைவிதித்து வாசல் கதவில் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வாகனம் உட்செல்ல தடை 

இருப்பினும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் வாகனத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் பக்கசார்பான வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து அன்றையதினம் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

இதன்போது, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்
சங்கு சின்னத்தில் போட்டியிடும் இரா.துரைரெட்னம் ஆகியோரும் அவ்விடத்தில் பொலிஸாரிடம் நீதி கோரியுள்ளனர். 

அன்றைய தினம், வேட்புமனு தாக்கல் செய்யவதற்கு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் வாகனங்களை கச்சேரிக்கு வெளியில்
நிறுத்திவிட்டு நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினது வாகனத்தை மாத்திரம்
அங்கிருந்த பொலிஸார் உட்செல்ல அனுமதியளித்ததையடுத்து சிறிது நேரம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, இருவரும் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version