Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

வாகன இறக்குமதிக்கான தடை, எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். 

தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விடுவது குறித்து நேற்று (19.01.2025) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

வாகனங்களின் விலை

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு பின்னர் வாகனங்களின் விலைகள், ஏற்ற இறக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், வாகனங்களின் விலைகள் ஒரு சீரான நிலையை எட்டியவுடன் பொதுச் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அதிகப்படியான செலவுகளை குறைப்பதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version