Home முக்கியச் செய்திகள் அநுர ஆட்சியமைத்தாலும் வாகன இறக்குமதியின் நிதி நிலைமைகளில் மாற்றமில்லை!

அநுர ஆட்சியமைத்தாலும் வாகன இறக்குமதியின் நிதி நிலைமைகளில் மாற்றமில்லை!

0

கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த திட்டங்கள் அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ரணிலின் அரசாங்கம் முடிவெடுத்தபோது, ​​தேவையான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பிறகு இலங்கை மத்திய வங்கி (CBSL)பரிந்துரைகளை வழங்கியது.

அத்துடன், அடுத்த வருடம் பெப்ரவரி 1ஆம் திகதிக்குள் தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், எதிர்பார்த்த பாதையில் நிதி நிலைமைகள் தொடருமானால், தீர்மானத்தை பேணுவது சாத்தியமானதாக இருக்கும்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு நிதியமைச்சகத்தினுடையது.

இதேவேளை, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, இறக்குமதித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் சாதகமாக செயற்படுவதாக அண்மையில் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், வாகனங்கள் மீதான 600% இறக்குமதி வரி பற்றிய சமீபத்திய வதந்திகளை அவர் நிராகரித்ததுடன் அத்தகைய அதிகரிப்பு சந்தையை முடக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version