Home முக்கியச் செய்திகள் வாகன இறக்குமதி மோசடியில் சிக்கிய மகிந்தவின் முன்னாள் ஆலோசகர்

வாகன இறக்குமதி மோசடியில் சிக்கிய மகிந்தவின் முன்னாள் ஆலோசகர்

0

அண்மையில் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியகம் பறிமுதல் செய்திருந்தது.

அந்த அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும்  ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றிய ஒருவரும் இதில் கைது செய்யாப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட சந்தேக நபர்களில் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றிய அஜித் சிறிகுமார கல்லகேவும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

சட்டவிரோத யானைக் குட்டிகள்

மேலும், இவர் முன்னதாக  சட்டவிரோதமாக யானைக் குட்டிகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் விசாரணையின் போது குறித்த யானைக் குட்டிகள்14 காடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டவை என்றும், இந்த விலங்குகள் வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 2014 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகம் துறை நடத்திய தணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version