வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றில் உரையாற்றி வரும் அவர், வாகன இறக்குமதி ஒருபோதும் நிறுத்தப்படாது என உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர், நாடாளுமன்றில் வாகன இறக்குமதிக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.
கொள்வனவு செய்யுங்கள்
மக்களை குழப்பும் கருத்துக்களே அவை. இவற்றை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லலை. இன்றே சென்று வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்யுங்கள்.
இந்த ஆண்டு உங்களால் வாகனம் ஒன்றை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு ஒன்றை வாங்கலாம் – எதுவும் மாறாது.
அது மாத்திரமன்றி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
