Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

வாகன இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் (Ministry of Tourism) முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த நடவடிக்கை மூலமான ஆயிரக்கணக்கான இறக்குமதியாளர்கள் பாதிப்படைவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

2020 மார்ச் 20 முதல் இந்த வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு 4 முதல் 5 ஆண்டுகளாக எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

நுணுக்கமான முறையில் நடைமுறை

சுற்றுலா அமைச்சினால் (Ministry of Tourism) முன்வைக்கப்பட்டுள்ள இந்த 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது புத்தம் புதிய முகவர்களுக்கு மாத்திரமே, பேருந்துகள் மற்றும் வேன்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மற்ற இறக்குமதியாளர்களுக்கு கொடுக்காமல் இந்தச் சிலரின் நலனுக்காகச் சுற்றுலாத்துறை அமைச்சினால் மிகவும் நுணுக்கமான முறையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனூடாக அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள எந்த இலக்குகளையும் அடைய முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version