Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி விதிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்: விலை அதிகரிப்பில் பாரிய உயர்வு

வாகன இறக்குமதி விதிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்: விலை அதிகரிப்பில் பாரிய உயர்வு

0

இறக்குமதி விதிமுறைகள் குறித்த தவறான முடிவின் விளைவாக சுமார் 400 வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உற்பத்தி ஆண்டு அல்லது சரியான உற்பத்தி திகதியைக் குறிப்பிட வேண்டிய தேவை இணக்கத்தை கடினமாக்கியுள்ளது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். 

 தாமதக் கட்டணங்கள் 

எனவே, அரசாங்கம் இந்த முடிவு குறித்து மேலும் விவாதிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளதுடன் இந்த நிலைமை கொள்வனவாளர்களை ஊக்கம் இழக்கச் செய்யும் என்று எச்சரித்த மெரெஞ்சிகே, அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தாமதத்தின் போது ஏற்படும் தாமதக் கட்டணங்கள் வாகனங்களின் விலையை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, வாகனங்களின் விலை, 40,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

எனவே, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியும் துணை அமைச்சர்களும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மெரெஞ்சிகே வலியுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version