Home இலங்கை பொருளாதாரம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! இரு வாரங்களில் வெளியாகவுள்ள முடிவு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! இரு வாரங்களில் வெளியாகவுள்ள முடிவு

0

இறக்குமதிக்கான சட்ட நடைமுறைகளை மீறிக் கடந்த ஐந்து மாதங்களில் 300இற்கும் மேற்பட்ட வாகனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாகனங்கள் குறித்து இரு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத இறக்குமதிகள் 

இதில், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களே அதிகமாக உள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி அனுமதி அளிக்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியே இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version