Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதியின் பின்னர் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்..!

வாகன இறக்குமதியின் பின்னர் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்..!

0

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி, குறிப்பிட்ட நான்கு வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், பழைய வாகனங்களின் விலை மற்றும் புதிய வாகனங்களின் விலையில் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 

மறுபக்கம், வாகன இறக்குமதிக்கு பின்னரான விலை ஏற்ற இறக்கங்களின் சந்தேகத்துடன் அதற்கான வரிகளும் விதிக்கப்படுமா என்னும் அச்சமும் எழுகின்றது. 

இந்நிலையில், “இதுவரை வாகனங்களின் கொள்வனவு அடிப்படையில், கலால் வரியும், ஆடம்பர வாகனங்களுக்கு ஆடம்பர வரியுமே விதிக்கப்பட்டது. 

இருப்பினும், இறக்குமதிக்கான அனுமதிக்கு பின்னர், மேலும் இரண்டு வரிகள் விதிக்கப்படலாம்” என்கின்றார் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version