Home இலங்கை அரசியல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஆளுங்கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம்

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஆளுங்கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம்

0

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்திய வாகனமொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான ப்ராடோ ரக சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விவாகரத்து வழக்கு

இந்நிலையில், குறித்த வாகனம் இன்று(25) பிலியந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுசந்த தொடாவத்தை வேறு பெண்களுடன் முறைகேடான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது மனைவி, அவரிடமிருந்து விவாகரத்துக் கோரி கெஸ்பேவ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version